பள்ளிக்கு படிக்க வந்த மாணவர்களை வேலை வாங்கிய அம்மா சிறப்பு திட்டம் முகாம் ஊழியர்கள்!

IMG-20170617-WA0034 IMG-20170617-WA0033

திருவண்ணமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, அடிவாரம் கிராமத்தில் “அம்மா சிறப்பு திட்டம் முகாம்” நடைப்பெற்றது. முகாமில் கலந்துக்கொள்ள வந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அமருவதற்கான நாற்காலி, பென்சுகள் அருகில்  இருந்த அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இருந்தே எடுத்துவரப்பட்டன.

அம்மா சிறப்பு திட்டம் முகாம்  நடைப்பெற்ற  இடத்தை   சுத்தம் செய்யும் வேலைகளையும், அமருவதற்கான நாற்காலி, பென்சுகள் தூக்கி வந்து எடுத்து செல்லும்  வேலைகளையும், பள்ளிக்கு படிக்க வந்த மாணவர்களை செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.  இதற்கு பள்ளி ஆசிரியர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இதைக் கண்ட அப்பகுதிமக்கள்  அதிர்ச்சியடைந்தனர்.

முகாமை ஒருங்கிணைக்க வேண்டிய வருவாய்துறை  பணியாளர்கள் எங்கு போனார்கள்? பள்ளிக்கு படிக்க வந்த மாணவர்களை படிக்கும் நேரத்தில் வேலை வாங்குது எந்த   வகையில் நியாயம்?

                              -ச.ரஜினிகாந்த், -மு.ராமராஜ்.