இலங்கைக் கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.

TN.CABINAT-ADraft D1 Draft D2

IF IF1

பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று எழுதியுள்ள கடிதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற 4 மீனவர்களை கடந்த 21-ம் தேதியன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்து, இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

இவர்களையும் சேர்த்து, இலங்கை சிறையில் உள்ள 20 தமிழக மீனவர்களையும், 137 மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க பிரதமர், வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும்.

படகுகளை உடனடியாக விடுவிப்பதால், தமிழக மீனவர்கள் மாநில அரசு அவர்களுக்காக மேற்கொண்டு வரும் நலத்திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். இவ்வாறு தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com