திருச்சி BHEL டிரையினிங் சென்டரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்!

S2640004

S2640007

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள (BHEL) பாரத் மிகுமின் நிறுவனத்தில் மத்திய அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், BHEL டிரையினிங் சென்டரில், பாரதீய மஸ்தூர் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதீய மஸ்தூர் சங்க மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில்,

1. தொழிலாளர் விரோத போக்கை கையாளுகிற விதமாக உள்ள “நிதிஆயோக்”-கில் உள்ள குறைபாடுகளை களைந்து மறு சீரமைக்க வேண்டும்.

2. மத்திய பொதுதுறை நிறுவனங்களின் பங்குகளை விற்க கூடாது.

3. ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிக்க வேண்டும்.

4. துப்பாக்கி தொழிற்சாலை போன்ற பாதுகாப்பு துறை நிறுவனங்களை தனியார்  மயமாக்க  கூடாது.

5. நேரடி அந்திய முதலீட்டை கைவிடவேண்டும்.

6. சமவேலை, சமஊதியம் அளிக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளுக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தொடர்ந்து பல்வேறு போராட்டத்தில் ஈடுபடபோவதாக போராட்ட குழுவினர் தெரிவித்தனர்.

இதில் மாவட்ட செயலளார் ஸ்ரீராம், துணை தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-ஆர்.சிராசுதீன்.