திருச்சி, திருவெறும்பூர் அருகே பெல் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் 11 ஆயிரம் பணம் கொள்ளை!

S2680006 S2680005 S2680002S2680004

திருச்சி, திருவெறும்பூர் அருகே பெல் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் 11 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

திருவெறும்பூர் அருகே உள்ள பெல் டவுன்சீப் சி செக்டரை சேர்ந்தவர் தாமஸ்(50) இவர் பெல் நிறுவனத்தில் கிரைன் ஆப்ரேட்டராக வேலைப் பார்த்து வருகிறார் இந்நிலையில் தாமஸ் கடந்த 24-ம் தேதி ஸ்ரீரங்கத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அப்படி சென்ற தாமஸ் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் அங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டார் இந்நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்த்தப்போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருந்தது, உள்ளே சென்று பார்த்தப்போது வீட்டு உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணி மணிகள் சிதறி கிடந்தது.

பின்னர் பீரோவில் பார்த்தப்போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் 11 ஆயிரம் ரொக்கம் களவு போனது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து தாமஸ் பெல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பெல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டதோடு, இச்சம்வம் குறித்து வழக்கு பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.

-ஆர்.சிராசுதீன்.