இலங்கை கொழும்பு துறைமுகத்தில் முகாமிட்டுள்ள ஆஸ்திரேலிய போர் கப்பல்!- படங்கள்.

Australian Naval ShipAustralian Naval Ship1Australian Naval Ship2Australian Naval Ship3Australian Naval Ship4Australian Naval Ship5

ஆஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான “Arunta” என்ற போர் கப்பல், 4-நாள் பயணமாக இன்று (10.07.2017) இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

118 மீட்டர் நீளமும், 14.8 மீட்டர் அகலமும் கொண்ட இக்கப்பலில் 24 அதிகாரிகள் உட்பட 190 வீரர்கள் உள்ளனர். இம்மாதம் 14-ம் தேதி வரை இக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில்  நிலைக்கொண்டிருக்கும். இங்கு தங்கிருக்கும் காலத்தில் ஆஸ்திரேலிய கடற்படை வீரர்கள், இலங்கை கடற்படையினருடன் இணைந்து கப்பல் பயிற்சிகள், சிநேகபூர்வமான சந்திப்புகள் மற்றும் பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

இரு நாடுகளுக்கும், அவர்களின் கடற்படைக்கும் இடையேயான நீண்ட உறவுகளைக் நிரூபிக்கும் விதமாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் சமீபத்தில் ஸ்ரீலங்காவில் ஏற்பட்ட  வெள்ள பாதிப்பின்போது அம்மக்களை மீட்பதற்காக 10 சிறிய படகுகளையும் மற்றும் நிவாரண உதவிகளையும் வழங்கியது இங்கு குறிப்பிடத்தக்கது.

-என்.வசந்த ராகவன்.