தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் பாக். நீரிணைப் பகுதியில் நேற்று இயந்திரப் படகு மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்து, காங்கேசன்துறைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
இலங்கை கடற்படையினரின் இதுபோன்ற தொடர் அத்துமீறல்களை நிறுத்த, தூதரக வாயிலாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 7 பேர் உட்பட தற்போது இலங்கை சிறையில் உள்ள 60 மீனவர்களையும், இலங்கை வசம் உள்ள 146 மீன் பிடி படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com