கர்ம வீரர் காமராசர் அவர்களின் 115-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் கே.பழனிசாமி அவரது உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்சென்னை தியாகராயநகர் திருமலை பிள்ளை சாலையில் உள்ள காமராஜரின் நினைவு இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
-ஆர்.அருண்கேசவன்.