தமிழக பத்திரிகையாளர்கள் நல சங்கத்தின் செயற்க்குழு கூட்டம் திருவண்ணாமலையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநில செயலாளர் யுவராஜ் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சேலம் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் M.மூர்த்தி காமராஜர் புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.
மேலும், இக்கூட்டத்திற்கு மாநில தலைவர் பரசுராமன் தலைமை வகித்தார். இதில் கௌரவ தலைவர் K.ரத்தினவேல், பாரத இதழ் தமிழ் வார செய்தித்தாள் நிறுவன ஆசிரியர் S.விஜய் மற்றும் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.
பெருந்தலைவர் காமராஜர் 115-வது பிறந்த நாளை முன்னிட்டு இக்கூட்டத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
-மு.ராமராஜ்,- ச.ரஜினிகாந்த்.