இந்திய நாட்டின் 14-வது குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, இன்று காலை 10 மணிக்கு (17-07-2017) சென்னை தலைமைச் செயலகத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது.
தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி முதல் நபராக சென்று பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு தனது வாக்கைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சபாநாயகர் தனபால், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி தலைவர் ஓ.பன்னீர் செல்வம், கேரளா மாநில எம்.எல்.ஏ. பரக்கல் அப்துல்லா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாக்களித்தனர். பிறகு அ.தி.மு.க., தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து வாக்களித்தனர்.
வாக்கு சாவடி அறைக்குள் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் ஏஜெண்டாக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் செம்மலை, தி.மு.க. சார்பில் சக்கரபாணி, காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி ஆகியோர் பணியாற்றினார்கள்.
-ஆர்.மார்ஷல்.