திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபார் பேரூராட்சிக்கு உட்பட 3-வது வார்டில் கழிவு நீர் வடிகால் வசதி இல்லாததால் குடியிருப்பு மனைகளில் கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது குறித்து “காலிமனைகள் கழிவு நீர் குளங்களாக காட்சியளிக்கிறது; கூத்தைபார் பேரூராட்சி 3-வது வார்டின் அவல நிலை!” என்ற தலைப்பில் நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் புகைப்பட ஆதாரத்துடன் கடந்த 08.07.2017 அன்று செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இந்நிலையில், காலிமனைகளில் தேங்கியிருந்த கழிவு நீரை தற்காலிகமாக வடிகால் வசதி ஏற்படுத்தி வடிய விட்டுள்ளனர் என்பதை, நமது வாசகர்களுக்கு தெரிவித்து கொள்கின்றோம்.
-ஆர்.சிராசுதீன்.
காலிமனைகளில் தேங்கியிருந்த கழிவு நீர் அகற்றப்பட்டது!
News
July 17, 2017 9:26 pm