இந்திய துணை குடியரசு தலைவர் தேர்தல்!- காங்கிரஸ் சார்பில் கோபாலகிருஷ்ண காந்தி, பா.ஜ.க. சார்பில் வெங்கையா நாயுடு வேட்பு மனு தாக்கல்.

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

இந்திய துணை குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சிகளின் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். பா.ஜ.க. கூட்டணி சார்பில் வெங்கையா நாயுடு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் இன்று (ஜூலை 18)  வெங்கையா நாயுடு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது பிரதமர் நரேந்திரமோதி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர்கள் உடன் இருந்தனர்.

sonia team vc

sonia team vc1

அதேபோல், இந்திய துணை குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் மகாத்மா காந்தி பேரன் கோபால கிருஷ்ண காந்தி இன்று (ஜூலை 18) தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன், ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் உடன் இருந்தனர்.

துணை குடியரசு தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

-எஸ்.சதிஸ் சர்மா.