திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சி சார்பில், மண்டல இயக்குனர் வேலூர் குபேந்திரன் அறிவுரைப்படி, திருவத்திபுரம் நகராட்சி ஆணையர் செல்வ பாலாஜி உத்தரவின்படி, திருவத்திபுரம் நகராட்சி எல்லைக்குள் உள்ள 16 பள்ளிகளில் டெங்குக் காய்சல் தடுப்புக்காக நிலவேம்பு குடிநீர் சுமார் 6,000 குழந்தைகளுக்கு கடந்த வாரம் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வழங்கப்பட்டது.
தற்போது, இரண்டாவது சுற்றாக மீண்டும் 16 பள்ளிகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. R.C.M. Aided Primary School, St. Josheph Matric Higher Secondary School -போன்ற பல்வேறு பள்ளிகளில் இப்பணியை நகராட்சி துப்புரவு அலுவலர் இலட்சுமணன் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் இரா.ஆல்பர்ட் ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், டெங்கு காய்ச்சல் தடுப்புகாக 35-க்கும் மேற்பட்ட பணியாளர்களை தற்காலிமாக நியமித்து நகராட்சி முழுவதும் கொசு உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்து, அவற்றை அழிக்கும் பணிகளும், அபேட் மருந்து நீர் நிலைகளில் ஊற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
அத்துடன் காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் கொசு மருந்து அடித்து வளர்ந்த நிலையில் உள்ள கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. மேலும், தினம் ஒரு வார்டு வீதம் துப்புரவு பணியாளர்களைக் கொண்டு குழுத்தூய்மை பணிகளும் நடைபெற்று வருகிறது.
–மு.ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.