இந்தியாவின் 15-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17-ம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மீராகுமாரும் போட்டியிட்டனர்.
இதில் ராம்நாத் கோவிந்த் 702044 வாக்குகளும், மீராகுமார் 367314 வாக்குகளும் பெற்றுள்ளனர். மொத்தம் பதிவான வாக்குகளில் ராம்நாத் கோவிந்த் 65.65 சதவீதமும், மீராகுமாரும் 3 சதவீதமும் பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம்நாத் கோவிந்த் வரும் ஜூலை 25-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற ராம்நாத் கோவிந்துக்கு, பிரதமர் நரேந்திர மோதி, மீராகுமார் மற்றும் பல முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com