கார் மோதியதில் அரசு பேருந்து காப்பித்தோட்டத்திற்குள் பாய்ந்தது!

IMG_20170721_164813 IMG_20170721_164545

ஏற்காடு பஸ் நிலையத்தில் இருந்து கொட்டச்சேடு கிராமத்திற்கு செல்லும் அரசு பேருந்து இன்று மாலை 3 மணிக்கு 49 பயணிகளுடன் புறப்பட்டது. பேருந்தை ஓட்டுனர் சின்ராஜ் ஓட்டினார். பேருந்து ஏற்காடு 5 ரோடு பகுதியை கடந்து கிரேஞ்ச் எஸ்டேட் அருகில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் இன்னோவா கார் ஒன்று அதிவேகமாக வந்தது.

அந்த கார் அரசு பேருந்தின் முன்புறம் மோதியது. இதனால் பேருந்து சாலையோரத்தில் உள்ள மின்சார  டிரான்ஸ் பார்மர் மீது மோதும்படி சென்றது. உடனடியாக ஓட்டுனர் சின்ராஜ் பேருந்தை அங்கிருந்த காப்பித்தோட்டத்திற்கு திருப்பி இறக்கினார். இதனால் பேருந்து டிரான்ஸ் பார்மர் மோதாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 49 பயணிகள் உயிர் தப்பித்தனர்.

-நவீன்குமார்.