கச்சராயன் ஏரியை பார்வையிட மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக ஏற்காட்டில் தி.மு.க.வினர் ஆர்பாட்டம்!

26slmnav01சேலம் மாவட்டம், கொங்கனாபுரம் பகுதியில் அமைந்துள்ள கச்சராயன் ஏரியில் தி.மு.க.வினர் கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்தனர். இந்த ஏரியை பார்க்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து, ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் ஒன்றிய செயலாளர் ஏ.டி.பாலு தலைமையில் நேற்று தி.மு.கவினர் ஆர்பாட்டம் செய்தனர். இதில் கலந்துக் கொண்ட தி.மு.க.வினர் 21 பேரை ஏற்காடு போலீசார் கைது செய்து, பின்னர் மாலை விடுவித்தனர்.

-நவீன் குமார்.