இலங்கை கடற்படைக்காக 66.55 மில்லியன் டொலர் செலவில், இந்தியாவில் உருவாக்கப்பட்ட அதி நவீன போர் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது!

SLN3SLN2 ????????????????????????????????????????????????????

இலங்கை கடற்படை நடவடிக்கைகளை விரிவாக்கும் நோக்கத்தில் இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தினால் -Goa Shipyard Limited (GSL) நிர்மாணிக்கப்பட்ட முதலாவது தொழில் நுட்ப ஆழ்கடல் கண்காணிப்பு போர் கப்பல் 28.07.2017 அன்று காலை 09.30 மணிக்கு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றனர்.

கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் நிஷாந்த அமரோசா உட்பட, இக்கப்பலில் 18 அதிகாரிகள் மற்றும் 100 வீரர்கள் உள்ளே இருந்தனர்.

இந்நிகழ்வுக்காக கடற்படை பணிப்பாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல கொடி அதிகாரி கடற்படை கட்டளை ரியர் அட்மிரல் கபில சமரவீர, மின் மற்றும் மின்னணு பொறியியல் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல், உபுல் ஏக்கனாயக்க ஆகிய சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட கடற்படை தலைமையகத்தின் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதன் பிறகு கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன கப்பலின் கண்காணிப்பு விஜயமொன்று மேற்கொண்டுள்ளார். அப்பொழுது அவரால் கப்பலின் செயல்திறன், செயல்பாடுகள் மற்றும் அமைப்பு ஆகிய விடயங்கள் சோதிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2017 ஆகஸ்ட் 02-ம் தேதி இக்கப்பல் உத்தியோகபூர்வமாக இலங்கை கடற்படை கப்பல் சயுரல என்ற பேரில் அதிகாரம் நியமனம் செய்தல் நிகழ்வு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு துறைமுகத்தில் நடைபெறவுள்ளன.

நவீன போர்கப்பலான இக்கப்பல் இலங்கை கடற்படை 67 ஆண்டுகள் வரலாற்றில் புதிதாக வாங்கப்பட்ட முதல் தொழில் நுட்ப கப்பலாகும். இந்தியாவின் இருந்து வெளிநாட்டு கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய இராணுவ கப்பல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.

மேலும், இக்கப்பல் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முன்பு இவற்றின் செயற்பாடுகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இக்கப்பலை தயாரிப்பதற்கு சுமார் 66.55 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகி உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2014 ஆண்டு பிப்ரவரி மாதம் 17 தேதி குறித்த வகையிலான இரு கப்பல்களின் கட்டமைப்புகளுக்காக இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்திடம், இலங்கை கடற்படையினர் ஒப்பந்தம் கையெழுத்தியது.

இதன் விளைவாக இக்கப்பல் தயாரிக்கும் பணிகள் 2014 மே மாதம் 15-ம் தேதியும், அதன் அடிப்படை கட்டமைப்பு பணிகள் 2014 செப்டம்பர் மாதம் 10-ம் தேதியும் ஆரம்பிக்கப்பட்டதுடன், இதன் வெள்ளோட்ட நிகழ்வு 2016 ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற்றது.

இக்கப்பல் இலங்கை கடற்படையிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த ஜூலை 22-ம் தேதி இந்தியாவுக்கான இலங்கை உயர் ஆணையாளர் சித்ராங்கனி வாகீஷ்வர தலைமையில், கோவா கப்பல் தளத்தில் நடைபெற்றது. அங்கு இலங்கை கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் சிரிமெவன் ரனசிங்கிடம் இக்கப்பல் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

மேலும், இலங்கை கடற்படைக்காக நிர்மாணிக்கப்படுகின்ற இரண்டாவது கப்பல் 2018 ஆண்டில் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-என்.வசந்த ராகவன்.