விடுமுறை தினமான இன்று ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஏற்காட்டில் உள்ள லேடீஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பகோடா பாயிண்ட் உள்ளிட்ட வியூ பாயிண்ட்டுகளிலும், சேர்வராய் கோவில், அண்ணாமலையார்கோவில் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
மதிய நேரங்களில் ரோஜா தோட்டம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, மான் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றி மகிழ்ந்தனர். படகு சவாரி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
-நவீன் குமார்.