மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அஞ்சலி!

JJ SAMATHI JJ SAMATHI-ARUN JATLY

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்தில், மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மலர் வளையம் வைத்து இன்று அஞ்சலி செலுத்தினார். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்த மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உயர் அதிகாரிகள்  உடனிருந்தனர்.

-கே.பி.சுகுமார்.