குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிரா ஆகிய பகுதிகளில் இடைவிடாத மழை கொட்டித் தீர்த்ததால், சபர்மதி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பனஸ்காந்தா, சபர்காந்தா, அனந்த், பதான், வல்சாத் ஆகிய மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால் பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் ராணுவம், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளை குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி பார்வையிட்டார்.
-எஸ்.சதிஸ் சர்மா.