மழைக்காரணமாக திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை தடுப்பு சுவற்றின் மீது மோதி லாரி கவிழ்ந்தது!

20170731_141814 20170731_141820 20170731_141818 20170731_141816

திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் 01.08.2017 அன்று இரவு 11.00 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதில் திருவண்ணாமலை மாவட்டம் பொற்குனம், M.N.பாளையம், மருத்துவாம்பாடி, இனாம்காரியந்தல் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளில் நீர் முழுமையாக நிரம்பி சாலையில் ஓடியது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஆனால், திருவண்ணாமலை – வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளானார்கள். பல வாகனங்கள் விபத்துக்கு உள்ளானது. இதில் ஒரு லாரி சாலை தடுப்பு சுவற்றின் மீது மோதி கவிழ்ந்தது. 

-மு.ராமராஜ்.