அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி!

??????????

IMG-20170809-WA0004

IMG-20170809-WA0003அனைத்து வீடுகளிலும் கழிவறை கட்ட வலியுறுத்தி வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம் சார்பில் விழிப்புணர்வு பேரணி கணியம்பாடியில் உள்ள அரசினர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. 

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.ஏ. ராமன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெரியசாமி, கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமால், மணவாளன், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊரக வளர்ச்சி முகமை) ரகுராமன் மற்றும் கணியம்பாடி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக கணியம்பாடி அரசினர் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காசிலிங்கம் வரவேற்புரை ஆற்றினார். விழாவுக்கான ஏற்பாடுகளை உதவி தலைமை ஆசிரியர் து.முருகன் செய்து இருந்தார்.

-மு.ராமராஜ்.
-ச.ரஜினிகாந்த்.