ஆட்சியும், கட்சியும் என் பக்கம் தான்! – நிரூபிக்க தயாராகும் கே.பழனிசாமி.

??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????vp-cm??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????நாட்டின் 13-வது குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு நேற்று பொறுப்பேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத்கோவிந்த் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோதி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 

cm-pipi-eps mp teamcm-pm

fmaj -cmeps

இவ்விழாவிற்கு சென்ற தமிழக முதல்வர் கே.பழனிசாமி, ஆட்சியும், கட்சியும் தன் பக்கம் தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை செய்துள்ளார்.

தமிழக முதல்வர் கே.பழனிசாமியின் அமைதியான அணுகுமுறையும், அவரது அரசியல் நடவடிக்கையும், பாரதிய ஜனதா கட்சியின் தலைமைக்கும், பாரத பிரதமர் நரேந்திர மோதிக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் பாரதிய ஜனதா கட்சி தலைமையின் ஆசியும், பாரத பிரதமர் நரேந்திர மோதியின் முழு ஆதரவும், தமிழக முதல்வர் கே.பழனிசாமிக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து கட்சியிலும், ஆட்சியிலும் பல அதிரடி முடிவுகளை இன்னும் ஒரு சில தினங்களில் கே.பழனிசாமி துணிந்து எடுப்பார் என்று தெரிகிறது.

ஒரு வேளை தனது தலைமையிலான ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதை எதிர்கொள்வதற்கும் கே.பழனிசாமி இப்போதே தயாராகி வருகிறார்.

கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக ஓ.பி.எஸ். ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோ (அல்லது) தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களோ நிச்சயம் வாக்களிக்கமாட்டார்கள். ஏனென்றால், தமிழ்நாட்டில் ஆட்சி கவிழ்ந்தால் கே.பழனிசாமியை விட, தினகரன் மற்றும் ஓ.பி.எஸ்.க்குதான் பாதிப்புகள் அதிகம். மத்திய ஆட்சியாளர்களால் தொல்லைகள் அதிகமாகும். அதை எதிர்கொள்ள இருவருமே தயாராக இல்லை.

இப்போதைக்கு தமிழக காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வின் சட்டமன்ற உறுப்பினர்களை பத்திரமாக பார்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

 ullatchithagaval@gmail.com