திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளயில் 71-வது சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி முருகன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.
பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணுப்பிள்ளை மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மீனா சீனிவாசன் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி நடைபெற்றது.
பின்னர் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு லட்சுமி முருகன் பரிசு அளித்தார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு ஜோதி, அமலி, ஜெரினா, ரேகா, மகேஸ்வரி, ஒவிய ஆசிரியர் ஆறுமுகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில் பட்டதாரி ஆசிரியர் சா.வேல்முருகன் நன்றி கூறினார்.
-செங்கம் சரவணக்குமார்.