சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து அவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கடந்த 2-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நரிமன் விசாரிக்க சசிகலா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால், சசிகலாவின் மறு ஆய்வு மனு அன்றைய வழக்கு விசாரணைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில், சசிகலாவின் மறுசீராய்வு மனு நேற்று (22.08.2017) உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ரோஹின்டன் நாரிமனுக்கு மாற்றாக நீதிபதி பாப்டே விசாரணைக் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வழக்கின் விசாரணையை திறந்தவெளி நீதிமன்றத்தில் (Open Court) நடத்த வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று (23.08.2017) விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சீராய்வு மனுக்களை உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com