முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், தண்டனை பெற்ற பேரறிவாளனை, விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறார். சமீபகாலமாக பேரறிவானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, முதல்வர் கே.பழனிசாமியை சந்தித்தும், பேரறிவாளனை விடுவிக்கக் கோரி அற்புதம்மாள் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 26 ஆண்டுகளுக்குப்பின் பேரறிவாளன் பரோலில் வருகிறார்.
-கே.பி.சுகுமார்.
பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவு!
News
August 24, 2017 10:32 pm