தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் சிறப்பு செயற்குழு கூட்டம் ஏற்காட்டில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் இன்று நடைப்பெற்றது.
தமிழகத்தில் உள்ள 183 கேன் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கலந்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் தலைவராக ஏற்காடு ரீட்ஸ் தொண்டு நிறுவன தலைவர் ராபர்ட், துணைத்தலைவராக மதர் டிரஸ்ட் இயக்குனர் புகழேந்தி மற்றும் திருவண்ணாமலை திருமலை தேவஸ்தான இயக்குனர் சுவாதிஸ்ரீ, ஓசூர் மத்திய குழு சேகர் டாட் டிரஸ்ட் இயக்குனர் பெரியநாயகம், சேலம் ரோஸ் டிரஸ்ட் இயக்குனர் ஜஷாகின், கேன் நெட்வொர்க் இயக்குனர் சுஜாதா ஆகியோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மலேசியா நிதி நிறுவனத்தை சேர்ந்த முகமது யூசப் கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் கேன் தொண்டு நிறுவன செயலாளர் பெருமாள் நன்றி கூறினார்.
-நவீன் குமார்.