தமிழக சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் துரைமுருகன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சிகள் சார்பில் ஆளுநரை நேற்று சந்தித்து மனு அளித்தனர்.
அப்போது, அதிமுகவில் நடப்பது உள்கட்சி பிரச்னை; அரசு சார்ந்த பிரச்சனையாக இல்லை என்றும், அதில் ஆளுநர் தலையிட முடியாது என்றும், கே.பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, மெஜாரிட்டியை இழக்கவில்லை என்றும், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில், கே.பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு, பெரும்பான்மையை (Majority) நிரூபிக்க தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் காலதாமதம் செய்யாமல் உத்தரவிடக்கோரி, திமுக, மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த தலைவர்கள் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் க.கனிமொழி தலைமையில், இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்தை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
கே.பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசிற்கு, மத்திய அரசின் மனப்பூர்வமான ஆதரவு இருக்கும்வரை, குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோதி விரும்பும் வரை, கே.பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக நிச்சயம் நீடிப்பார் என்று திட்டவட்டமாக தெரிகிறது. அதற்கான அதிரடி நடவடிக்கைகள் இன்னும் ஒரு சில தினங்களில் நிச்சயம் அரங்கேற இருக்கின்றது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com