நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இளைஞர்கள் கண்டன ஆர்பாட்டம்!

???????????????????????????????????????????????????????????????????????????????????????????

சேலம் மாவட்டம், ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் ஏற்காடு பகுதி இளைஞர்கள் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டம் துவக்கத்தில் நீட் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்து, தற்கொலை செய்து கொண்ட அனிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மெழுகுவர்த்திகள் ஏற்றி சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிப்படைவது குறித்தும், நீட் தேர்வு நிரந்தர விலக்கு தேவை குறித்தும் இளைஞர்கள் பேசினர். மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்த கண்டன ஆர்பாட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துக்கொண்டனர்.

 நவீன்குமார்.