இலங்கை கடற்பரப்பில் சட்ட விரோத மீன் பிடிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் காவலில் வைக்கப்பட்ட 76 இந்திய மீனவர்கள் மற்றும் கடந்த ஆகஸ்ட் 31- ம் தேதி கடலில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 4 இந்திய மீனவர்கள் உள்பட மொத்தம் 80 இந்திய மீனவர்கள் இன்று (04 செப்டம்பர் 2017) இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
விடுவிக்கப்பட்ட அனைவரையும், சர்வதேச கடல் எல்லைப் பகுதியில், இந்திய கடலோர காவல் படையினரிடம், இலங்கை கடற்படையினர் ஒப்படைத்தனர்.
-என்.வசந்த ராகவன்.