ஒரே கல்வி இல்லாமல் ஒரே தேர்வு எப்படி நியாயமாகும்?- நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் பணியை ராஜினாமா செய்த அதிசய பெண்!

SABARI MALA TEACHER AND SON

விழுப்புரம் மாவட்டம், வைரபுரம் ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாகப் பணியாற்றிய சபரிமாலா, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்தியா முழுவதும் ஒரே கல்வி வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தனது 7 வயது மகனுடன் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.

இப்போராட்டத்துக்கு அரசு அனுமதியளிக்க மறுத்த காரணத்தினால், தன்னுடைய ஆசிரியர் பணியை ராஜினாமா செய்துள்ளார்.

Sbari mala Teacher

இதுதொடர்பாக அவர் விழுப்புரம் மாவட்டம் தொடக்கப்பள்ளி அதிகாரியிடம் அளித்துள்ள கடிதத்தில்,

Sbari mala Teacher. Lr

நான் கடந்த 2002-ம் ஆண்டு முதல் ஆசிரியராக தமிழகக் கல்வித்துறையில் பணியாற்றி வருகிறேன்.

மாணவர்களுக்காக எனது வாழ்வையே அர்ப்பணித்து பல மாநில சாதனையாளர்களை உருவாக்கியுள்ளேன். ஏற்றத்தாழ்வற்ற சமூகம் அமைய வேண்டும் என்பதற்காகவே எனது மகனை அரசுப்பள்ளியில் படிக்க வைக்கிறேன்.

இந்நிலையில் மாணவி அனிதாவின் மரணத்தை ஓர் ஆசிரியராகக் கல்வி எழுச்சிகொள்ள வேண்டிய தருணமாக உணர்ந்தேன்.

ஒரே கல்வி இல்லாமல் ஒரே தேர்வு எப்படி நியாயமாகும் என்ற வேதனையில் எனது வெளிப்பாட்டைத் தன்னெழுச்சியை 06.09.2017 அன்று காலை 9.30 மணிக்கு எனது பள்ளிக்கு வெளியே உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினேன்.

அனுமதியில்லாமல் தொடரக் கூடாது என்றதும் 1.30 மணிக்கு அங்கிருந்து கிளம்பி காவல்துறையிடம் அனுமதி கேட்டேன், அவர்கள் அனுமதி வழங்கவில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு ஆசிரியர் கல்வி பிரச்னைக்காகக் குரல் எழுப்பியது குற்றம் என்று சொல்கிறது சட்டம்.

சம்பளத்துக்காக ஆசிரியர்கள் போராடும்போது, சமத்துவம் கொண்ட கல்விக்காக ஓர் ஆசிரியர் போராடக் கூடாது என்பது மிகுந்த வேதனையைத் தருகிறது.

என் வேலையைவிட எனக்கு தேசம் முக்கியம் என்பதால் என் ஆசிரியர் பணியை 07.09.2017 முதல் வருத்தத்தோடு ராஜினாமா செய்கிறேன்.

இவ்வாறு சபரிமாலா தனது பணி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சம்பளம் கொடுத்தால் எத்தனை ஆசிரியர்கள் வேண்டுமானாலும் கிடைப்பார்கள்!- ஆனால், சபரிமாலா போன்று உண்மையான ஆசிரியர்கள் கிடைப்பது அரிது.

ஆசிரியர் சபரிமாலா பணி விலகல், தமிழக கல்விதுறைக்கு பெரும் இழப்பாகும்.

எனவே, இவ்விசியத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு, ஆசிரியர் சபரிமாலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் மறுபடியும் ஆசிரியர் பணியில் தொடர ஆவணச் செய்ய வேண்டும்.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com