மாணவி அனிதா மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரியும் திருச்சியில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று (08.09.2017) நடைபெற இருந்தது. இப்பொதுக்கூட்டத்துக்கு காவல்துறை அனுமதி பெற்ற பின்னரே அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இந்நிலையில், அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற இருந்த இந்த கண்டன கூட்டத்துக்கு, உச்சநீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி காவல்துறை சார்பில் இன்று (08.09.2017) மாலை அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், தடையை மீறி திட்டமிட்டபடி திருச்சியில் திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று (08.09.2017) நடைபெற்றது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர்.
-கே.பி.சுகுமார்.
படங்கள்: ஆர்.சிராசுதீன்.