சத்துணவு அமைப்பாளர் பணி நேர்காணலுக்கு வந்தவர்கள் காலை 7 மணிமுதல் காத்திருக்கும் கொடுமை!

IMG-20170912-WA0045IMG-20170912-WA0046IMG-20170912-WA0047IMG-20170912-WA0044

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம், புதுமல்லவாடியில் இன்று (12.09.2017) சத்துணவு அமைப்பாளர்கள் பணிக்கான நேர்காணல் நடைபெறுதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான நேர்காணலில் கலந்து கொள்ளும் நபர்கள் இன்று காலை 07.00 மணிக்கே வந்து விட்டனர். 

இச்செய்தி பதிவாகும் (இன்று 12.09.2017 இரவு 08.50 மணி) வரை நேர்காணலுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. நேர்காணலுக்கு வந்தவர்களில் சிலர் சிறு குழந்தைகளோடு காத்திருந்து அவதிபடுகின்றனர்.

இந்த நேர்காணல் நடைபெறுவது மாவட்ட ஆட்சியருக்கு தெரியுமா? தெரியாதா?

-மு.ராமராஜ்.