தமிழகத்தில் 14 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கூடுதல் டி.ஜி.பி.க்களாக இருந்த, ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோருக்கு டி.ஜி.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் உள்துறை செயலாளர் அலுவலகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக இருந்த விஜயகுமார் சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.
டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு பெற்றவர்கள் விவரம் வருமாறு:
பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ஜாங்கிட் ஊழல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆகவும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.,யாக இருந்து வரும் திரிபாதி சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவராகவும், மனித உரிமை கமிஷன் ஏ.டி.ஜி.பி.யாக இருந்து வரும் காந்திராஜன் மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு துணை ஆணையராக சுந்தரவடிவேல், காவலர் நல பிரிவு ஏ.டி.ஜி.பி. ஆக ராஜிவ் குமார், ஊர்காவல்படை ஏ.டி.ஜி.பி. ஆக கருணாசாகர் கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி.ஆக வன்னிய பெருமாள் பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி. ஆக சுனில் குமார் சிங் ஆகியோர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஏ.எஸ்.பி.க்கள் சுஜித் குமார் ரோஹித் நாதன் ஆகியோர் எஸ்.பிக்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்:
சந்திரசேகர் சஹாமுரி, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கால்நடை பராமரிப்பு துறை இயக்குநராக ஜெயந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com