ஏற்காடு மலைக்கிராமத்தில் 16–ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு நடுகற்கள் கண்டறியப்பட்டுள்ளது.

??????? ???????? ??????????? ???? ?????????? ????? ??????? ???

??????? ??????? ??????????? ???? ???????????? ??????? ??????

ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழுவைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் நீலகிரி ரா.கிருஷ்ணமூர்த்தி், சேலம் மாவட்டம், ஏற்காடு ஒன்றியம், வாழவந்தி கிராமத்தில் நாகம்மன் காடு என்ற பகுதியில் அருணாச்சலம் (90 வயது) என்பவரின் நிலத்தில் 16–ம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு நடுகற்களை   கண்டுபிடித்துள்ளார்.

ஒரே கல்லில் வீரனின் சிற்பமும், காட்டு எருதின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. இதில் வீரனின் தலையில் போர் கவசம் மார்பில் பெரிய பட்டையுடைய ஆபரணமும், கை மணிக்கட்டில் ஒரு வளையமும், மேல் கையில் இரண்டு வளையங்கள், இடுப்பில் வாளுடன் கூடிய கச்சையும், போர் உடை உடுத்தியது போன்று வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

மேலும், வீரனின் இடது கை எருதின் அருகிலும், விலங்கின் மீதுள்ள அச்சத்தால் வலது கை கட்டாரி ஏந்தியவாறு உள்ளது. எனவே, இதில் உள்ள விலங்கு காட்டு எருது என்பது உறுதியாகிறது.

இந்த நடுகல் 16–ம் நூற்றாண்டை சார்ந்தது. அந்த காலத்திலேயே எல்லைப்புற பழங்குடிகள், காட்டு விலங்குகளைப் பழக்கி விற்பது தொழிலாக இருந்துள்ளது. வனத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் காட்டெருதுகளைக் காக்கும் பொருட்டு ஏற்பட்ட போரில் விழுப்புண் பட்டு வீரன் இறந்துள்ளார். அவரின் நினைவாக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது. இந்த நடுகல் கற்கூடாரத்தின் உட்பகுதியில் அமைந்துள்ளது. அதன் வாயில் பகுதியில் இரண்டு புறத்திலும் நாகங்களின் சிலைகள் நடப்பட்டுள்ளது.

அதே போல், காட்டெருது காத்த பட்டான் நடுகல்லிற்கு சற்று இடைவெளி விட்டு, புலிக்குத்தி பட்டான் நடுகல் அமைந்துள்ளது. இந்த நடுகல்லில் வீரன் புலியின் மார்பில் ஈட்டியை பாய்ச்சியப்படி செதுக்கப்பட்டுள்ளது. புலியுடன் போரிட்டு புலியைக் கொன்று விழுப்புண் பட்டு இறந்திருப்பார். அவரின் நினைவாக இந்த நடுகல் நடப்பட்டுள்ளது. இதில் வீரனின் தலையில் கவசமும், பெரிய காதுகளுடன் செதுக்கப்பட்டுள்ளது. இதில் பாதியளவு மண் மூடிய நிலையிலும், வேர்களின் இடையில் சிக்கியும் காணப்படுகிறது.

இது போன்ற இரண்டு நடுகற்கள் அருகருகே காணப்படுவது இதுவே முதல் முறையாகும். இது ஆதி தமிழனின் வீரத்திற்கு வரலாற்று சான்றாகவும், ஏற்காட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும் இது அமைந்துள்ளது.

-நவீன் குமார்.