திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் தனது தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் பயணிகளுக்கு இருக்கைகள் வழங்குவதற்கு வந்தபோது, திருவெறும்பூர் ஆதார்ஷ் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல வேண்டுமென தமிழ்நாடு மக்கள் வளர்ச்சி குழு சார்பில் கோரிக்கை மனு அளித்தனர் .
திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார் தனது தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் ரூ. 15 லட்சம் செலவில் திருச்சி ஜங்சன், ஸ்ரீரங்கம் மற்றும் திருவெறும்பூர் ரயில் நிலையங்களில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.
இதில், தமிழக பிற்படுத்தப்ட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, கோட்ட ரயில்வே மேலாளர் உதயகுமார்ரெட்டி, கோட்ட வணிக மேலாளர் அருண்குமார் தாமஸ், வணிக இன்ஸ்பெக்டர் தங்கமோகன், திருவெறும்பூர் நிலைய அலுவலர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் வளர்மதி பயணிகள் இருக்கைகளை திறந்து வைத்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு மக்கள் வளர்ச்சி குழு சார்பில் திருவெறும்பூர் ரயில் நிலையம் ஆதர்ஷ் அந்தஷ்து பெற்றது என்றும், இந்த ரயில் நிலையத்தின் மூலம் திருவெறும்பூர் பகுதியில் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான என்.ஐ.டி, மத்திய தொழிற்சாலைகளான பெல், துப்பாக்கி தொழிற்சாலை, ஹெச்.ஏ.பி.பி மற்றும் நுற்றுகணக்கான சிறு, குறு தொழிற்சாலைகளும் உள்ளது.
மேலும், புகழ்பெற்ற மலைக்கோவில், திருநெடுங்களம் உள்ளிட்ட ஆண்மிக தளங்களும் உள்ளது. அவற்றிற்கு ஏராளமான பொது மக்களும் ஊழியர்களும், மாணவ, மாணவிகளும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் 12 ஆண்டுகளாக நின்று சென்ற மலைக்கோட்டை விரைவு வண்டி கடந்த 2013- ஆம் ஆண்டு முதல் திருச்சியிலிருந்து புறப்பட்டு செல்வதற்கு மாற்றம் செய்யபட்டுள்ளது .
இந்நிலையில் இந்த வழியாக 13 ஜோடி விரைவு வண்டிகள் வந்து செல்கிறது. அதில் மைசூர் மைலாடுதுறை விரைவு வண்டி மட்டுமே நின்று செல்கிறது. இதனால் ஏராளமான பொது மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதனால் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சென்னை ராமேஷ்வரம், சென்னை திருச்சிராப்பள்ளி(சோழன்), சென்னை திருச்செந்தூர், மயிலாடுதுறை திருச்சிராப்பள்ளி, எர்ணாகுளம் காரைக்கால், மண்ணார்குடி கோயமுத்தூர் (செம்மொழி) ஆகிய விரைவு ரயில்கள் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லவேண்டுமென, தமிழ்நாடு மக்கள் வளர்ச்சி குழ தலைவர் அன்பழகன், இணைச்செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் கோரிக்கை மனுவை அளித்தனர். அதனை பெற்று கொண்ட திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் குமார், உதய் குமார் தாஸ்ரெட்டியிடம் நடவடிக்கை எடுக்கும்படி கூறினார்.
மேலும், ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
இந்த விழாவில் தென்னக ரயில்வே உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு உறுப்பினர் கோவிந்தராஜ் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
-ஆர்.சிராசுதீன்.