திருவண்ணாமலை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிர விழிப்புணர்வு முகாம்!

20170919_110903 20170919_104515 20170919_103658 20170919_103306

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மேல்நாகரம்பேடு கிராமத்தில், இன்று (19.09.2017) காலை 10.30 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் .சு.கந்தசாமி உத்தரவின் அடிப்படையில், நாவல்பாக்கம் பொது சுகாதாரம் நிலையம் மற்றும் மேல்நாகரம்பேடு துணை சுகாதாரம் நிலையம், நோய் தடுப்பு மருந்துத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர். கே.ராஜவேல், கிராம செவிலியர் எம்.கலைச்செல்வி ஆகியோரின் தலைமையில், டெங்கு காய்ச்சல் தீவிர விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

மேலும், நோய் பரவாமல் இருப்பதற்கு வீட்டில் சுற்றி உள்ள பாத்திரங்கள், சிமெண்ட் தொட்டிகள், உடைந்த பானைகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், டயர், இதிலே தண்ணீர் தேக்கி வைக்காமல் வாரம் ஒரு முறை கண்காணித்து முற்றிலும் ஒழித்திட வேண்டும் என்றும், அதுமட்டுமல்லாமல், கிராமத்திலே காய்ச்சல் யாருக்கேனும் ஏற்பட்டால், அருகில் உள்ள சுகாதார நிலையத்தில் தெரிவித்து நோய் தடுக்க உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.

                    .ரஜினிகாந்த்.

மு.ராமராஜ்.