ஜெயேந்திரர் சந்திப்பும், சர்ச்சையும்!- மயிலாடுதுறையில் மாட்டிக்கொண்ட எடப்பாடி கே.பழனிசாமி.

tncm eps-sri jayaendrar in mayiladuthurai 20.09.2017

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (20.09.2017) மயிலாடுதுறையில் சந்தித்து ஆசீ பெற்று இருப்பது, அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.

tncm eps in mayiladuthurai 20.09.2017atncm eps in mayiladuthurai 20.09.2017tncm eps in mayiladuthurai 20.09.2017b

நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில், காவிரி மகா புஷ்கரம் விழா நடைபெற்று வருகிறது. இன்று (20.09.2017) காலை 10 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி துலாகட்டம் காவிரியாற்றில் புனித நீராடி வழிபாடு நடத்தினார். அவருடன் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உடன் இருந்தார்.

அதன்பிறகு, மயிலாடுதுறை, ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோவிலில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை சந்தித்து ஆசீ பெற்றதோடு, அவருடன் இணைந்து காவேரி புஸ்கரம் விழா மலரையும் இன்று (20.09.2017) வெளியிட்டுள்ளார். உடன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளார்.

அம்மா வழியில் ஆட்சி நடத்துகிறோம் என்று, மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை சந்தித்து ஆசீ பெற்று இருப்பது சற்று நெருடலை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சி அதிகாரத்திலும், உயர் பதவிகளிலும் இருப்பவர்கள், சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும், சட்டத்திற்கும், தர்மத்திற்கும் ஏற்புடையவர்களாகவும், மக்களின் மனநிலையை பிரதிபளிக்கக் கூடியவர்களாகவும் அவசியம் இருக்க வேண்டும்.

அதைத்தான் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியிடமும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

தவறான   ஆலோசனைகளும், தவறான வழிக்காட்டலும் தலைகுனிவையும், தர்மசங்கடத்தையும்தான்  ஏற்படுத்தும் என்பதை இனிமேலாவது எடப்பாடி கே.பழனிசாமி  புரிந்து கொள்ளவேண்டும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com