சென்னைக்கு வருகைதந்துள்ள கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் முதலமைச்சர் கே.பழனிசாமியை இன்று சந்தித்து பேசினார்.
முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டால், இரு மாநில முதல்வர்களால் பேசி தீர்க்கப்படும். சகோதரர்களான தமிழக, கேரள மக்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கு, அதிகாரிகள் மூலம் பேசி தீர்வு காண்போம்.
இவ்வாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-கே.பி.சுகுமார்.