திரிபுரா மாநிலத்தில், கோவாய் பகுதிகளில், சி.பி.எம். ஆதரவு திரிபுரா உபஜாதி கன் முக்தி பரிஷத் தொண்டர்களுக்கும், திரிபுரா பூர்வக்குடிகள் முன்னணியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ‘டின் ராத்’ என்ற கேபிள் செய்திச் சேனல் பத்திரிகையாளர் சாந்தானு போவ்மிக், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள பத்திரிகையாளர் அமைப்புகளும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து திரிபுரா பூர்வக்குடி மக்கள் முன்னணிக் கட்சியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கலவரம் பரவாமல் தடுக்க கோவாய் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பத்திரிகையாளர்கள் படுகொலை நாளுக்கு நாள் தொடர்கதையாக நீடித்து கொண்டிருக்கிறது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.