சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா மணிவிழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
எச்.ராஜாவும்- மு.க.ஸ்டாலினும் கொள்கை அடிப்படையில் அரசியலில் எதிரும், புதிருமாக இருந்தாலும், எச்.ராஜாவின் மணிவிழாவிற்கு, மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்து இருப்பது, உண்மையிலுமே பாராட்டத்தக்கது.
இது ஒரு ஆரோக்கியமான செயல்பாடாகதான் இன்று பார்க்கப்பட்டது. நீண்ட நாளைக்கு பிறகு வட இந்திய அரசியல்வாதிகளை இச்சம்பவம் நினைவுப்படுத்தியது.
-ஆர்.மார்ஷல்.