மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு ஏற்கனவே (25.09.2017) உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஜெ.ஜெயலலிதா மரணம் தொடர்பாக 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான அரசாணை இன்று (27.09.2017) வெளியிடப்பட்டது.
அந்த அரசாணையில், கடந்த (2016) ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி முதல், டிசம்பர் 5-ம் தேதி வரையிலான சூழல் குறித்து இந்த ஆணையம் விசாரணை நடத்தும் என்றும், விசாரணை ஆணையம் தனது அறிக்கையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும், மேலும், விசாரணையை அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com