ஈஸ்ட் விண்ட் ஃபுட்வேர் தொழிற்சாலையில் போனஸ் விவகாரம்!- பணியாளர்கள் சாலை மறியல்.

ஈஸ்ட் வைன்ட் ஃபுட்வேர் தொழிற்சாலையில் போனஸ் விவகாரம்2EFW1EFWஈஸ்ட் வைன்ட் ஃபுட்வேர் தொழிற்சாலையில் போனஸ் விவகாரம்1ஈஸ்ட் வைன்ட் ஃபுட்வேர் தொழிற்சாலையில் போனஸ் விவகாரம்3

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்டில் உள்ள லோட்டஸ் ஃபுட்வேர்– (Lotus Food Wear) காலணி தொழிற்சாலையில் Site:1-ல் ஊழியர்களுக்கு சரியான  முறையில் போனஸ் வழங்கப்படுகிறது.

ஆனால், Site:2-ல் உள்ள ஈஸ்ட் விண்ட் ஃபுட்வேர் (East Wint Food Wear)  காலணி தொழிற்சாலையில் பணியாளர்களுக்கு தரவேண்டிய போனஸ் தொகையை முழுமையாக வழங்காததால், தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து, 1200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை அழைத்து, ஈஸ்ட் விண்ட் ஃபுட்வேர் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தாததால், ஆத்திரமடைந்த ஊழியர்கள், தொழிற்சாலையை விட்டு வெளியேறி காஞ்சிபுரம்வந்தவாசி சாலையில் அமர்ந்து 27.09.2017 அன்று மறியலில் ஈடுபட்டனர்இதனால் அங்கு ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

-மு.ராம்ராஜ்.