திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே இன்று மாலை பலத்த காற்று வீசியதால், சாலை ஓரத்தில் இருந்த பழமையான வேப்பம் மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்களின் உதவியுடன் சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.
-ஆர்.அருண்கேசவன்.