தமிழ்நாடு புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று (06.10.2017) பதவி ஏற்றுக் கொண்டார். சென்னை கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்பு விழா நடைப்பெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி குமாரி இந்திரா பானர்ஜி, பன்வாரிலால் புரோஹித்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பித்துரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு ஆளுநரின் மனைவி புஷ்பாதேவி புரோஹித், தமிழ்நாடு ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா மற்றும் அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.
-சி.வேல்முருகன்.
-எஸ்.திவ்யா.