இலங்கை வடக்குப் பிரதேசத்தின் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகளில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர், நெடுந்தீவுக்கு மேற்கு திசையில் சுமார் 11.8 கடல் மைல்கள் தூரத்தில் இலங்கை கடல் பகுதியில் சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய மீனவர்களை 04.10.2017 அன்று இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து ஒரு படகு, மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதன் பின் சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்பாண கடற்தொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட படகு, மீன்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் அனைத்தையும் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் தளத்தில் ஒப்படைத்துள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.