விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், நெய்வணை ஊராட்சி, நெ.பில்ரம்பட்டு கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
நேற்று பெய்த மழையில் ஊருக்குள் செல்லும் பிரதான தெருக்கள் சகதியாக மாறி உள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் முதியோர்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.
இன்று ஊருக்குள் வியாபாரம் செய்ய வந்த வாகனம் ஒன்று சேற்றில் மாட்டிக்கொண்டது. அருகில் இருந்தவர்கள் வாகனத்தைத் தள்ளி வழியனுப்பி வைத்தார்கள்.
இதுக்குறித்து, உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் பல முறை மனுக் கொடுத்தும், இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இப்படி இருந்தால், டெங்கு பரவாமல் வேறு என்ன செய்யும்?
–ச.ரஜினிகாந்த்.