திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டாட்சியர் ஷோபா தலைமையில், சர்வதேச பேரிடர் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி, திருவெறும்பூர் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளியிலிருந்து தொடங்கி, திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைப்பெற்றது.
பேரணியில் முக்குலத்தோர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பேரிடர் காலங்களில் பொது மக்கள் தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து வழிப்புணர்வு வாசங்கள் இடங்கிய பதாகைகளை ஏந்தி, பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.
பின்னர், திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், நவல்பட்டு தீயணைப்பு துறை வீரர் உதயகுமார் தலைமையில், பேரிடர் காலங்களில் எப்படி நடந்து கொள்வது என்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறியதோடு, தீ விபத்து ஏற்பட்டால் எப்படி பாதுகாத்து கொள்வது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இவ்விழாவில் துணை வட்டாட்சியர்கள் சங்கர நாராயணன், கீதாராணி, வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தோணிசாமி, செல்வகணேஷ், சுப்பிரமணி மற்றும் பொது மக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இப்பேரணிக்கு திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் மதன் தலைமையிலான போலிசார் பாதுகாப்பு அளித்தனர்.
-ஆர்.சிராசுதீன்.