ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் வழிகாட்டுதலின் பேரில் இயங்கும், சேலம் மாவட்ட “மக்கள் பாதை” என்ற அமைப்பின் சார்பில், இன்று (13.10.2017) காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை உத்தமசோழபுரத்தில் உள்ள வி.ஸ்.ஏ கல்வி நிறுவனத்தில் இரத்ததான முகாம் நடைபெற்றது. ஏராளமான மாணவர்கள் இரத்த தானம் வழங்கினர்.
வி.ஸ்.ஏ., கல்லூரி முதல்வர் மகேஸ்வரன், சி.இ.ஓ. இராஜேந்திரன் ஆகியோரின் மேற்பார்வையில், மணிபிரகாஷ் மற்றும் வழக்குரைஞர் சுமதி ஆகியோரின் உதவியோடு, சேலம் அரசு மருத்துவமனையின் இரத்த பிரிவு குழுவினர்களின் வழிகாட்டுதலின்படி இந்த இரத்தான முகாம் நடைப்பெற்றது.
-ச.ரஜினிகாந்த்.