பிரதமர் நரேந்திர மோதி இன்று (14.10.2017) பாட்னா பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றினார்.
பாட்னா பல்கலைக்கழகத்தை பார்வையிடவும், மாணவர்களை சந்திக்கவும், அவர்களை கௌரவிப்பதற்காகவும் நான் இங்கு வந்துள்ளேன்.
பீகார் மாநிலத்தை நான் வணங்குகிறேன், இந்த பல்கலைக்கழகம் நாட்டுக்கும், மாணவர்களுக்கும் பெருமளவில் ஊக்கமளித்துள்ளது.
பாட்னா பல்கலைக் கழகத்தில் படித்து வந்தவர்கள் பல்வேறு மாநிலங்களில் சிவில் சர்வீசஸ் பணிகளில் உள்ளார்களா? என்பதை நான் கவனித்து இருக்கிறேன். தில்லியில் நான் பல அதிகாரிகளை தொடர்பு கொள்கிறேன், அவர்களில் பலர் பீகாரை சேர்ந்தவர்கள்.
பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், மாநில முன்னேற்றத்திற்காக செயல்பட்டு வருகிறார், இது பாராட்டத்தக்கது. கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்கு, மத்திய அரசு மிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
இந்த நிலத்திற்கு தனித்துவமான ஒரு மரபு உள்ளது. நமது பல்கலைக்கழகங்கள் புதுமையான கற்றல் நோக்கி செல்ல வேண்டும்.
உலகமயமாக்கல் சகாப்தத்தில், உலகெங்கிலும் மாறிக்கொண்டிருக்கும் போக்குகள் மற்றும் போட்டித்தன்மை அதிகரித்துள்ளதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த சூழலில், இந்தியா உலகில் முதல் இடம் பெற வேண்டும்.
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு, புதுமையான தீர்வுகள் பற்றி சிந்திக்க, மாணவர்கள் முன் வரவேண்டும். மாணவர்கள் கற்றுக்கொள்வதன் மூலம் தொடக்கத்திலிருந்து சமுதாயத்திற்காக நிறைய நற்செயல்களை செய்ய முடியும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
பாட்னா பல்கலைக்கழகத்தில் இருந்து விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் நரேந்திர மோதி, பீகார் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் உடனிருந்தார்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
படங்கள்: எஸ்.சதிஸ் சர்மா.