இலங்கையில் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 14 நபர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 2 படகுகள், அங்கீகாரமில்லாத சட்டவிரோத 6 மீன்பிடி வலைகள், 170 கிலோ எடையுள்ள சுறா மீன்கள், 23 துண்டுகள் கொண்ட மொத்த 125 அடி நீள சந்தனக் கட்டைகள், கேரளா கஞ்சா மற்றும் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக்குகள் ஆகியவற்றை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மீன் வளர்ப்பு மற்றும் நீர்வள ஆதார சட்டத்தின் படி சுறா மீன்கள் அரிய வகை இனங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
எனவே, உணவுக்காகவோ, பொழுதுப்போக்கிற்காகவோ அதை பிடிப்பது, வேட்டையாடுவது, காட்சிப்படுத்துவது முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-என்.வசந்த ராகவன்.